உள்வீட்டினுள் குண்டுவைத்தது யார்?


இலங்கையின் வடபுலத்தில் வெடித்து வரும் குண்டுகளிற்கு பின்னால் ஜனாதிபதிக்கு அருகில் யார் இருப்பதென்ற போட்டிக்கான குண்டு வெடிப்புக்களாக இருப்பது அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் தமிழர்  பகுதியில் உள்ள இராணுவ முகாம்களிற்கு அருகில் காணப்படும் பொதிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வன்னி பகுதியிலுள்ள படையினருக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பகுதியிலுள்ள முகாமொன்றிற்கு அருகில் வெடிபொருள் மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிய பொதியொன்றிற்குள் பொம்மையொன்று காணப்பட்டதாகவும், அதை திறந்தபோது திடீனெ தீப்பிளம்பொன்று வெளியனதாகவும், எனினும், இதனால் யாரும் பாதிக்கப்படவில்லையென்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடிபொருள் அந்த பார்சலில் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்னொரு பகுதியிலும் மர்ம பார்சலை பாதுகாப்பு படையினர் மீட்டு செயலிழக்க செய்துள்ளனர். சிறிய அளவில் வெடிபொருட்களும், இரும்பு துண்டுகளும், வேறு பொருட்களும் அதில் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபடும் இராணுவத்தினர் இவ்வாறான பொதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், அவ்வாறான மர்ம பொதிகள் காணப்பட்டால் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரின் உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

எனினும் இலங்கை இராணுவம் -அதிரடிப்படை,காவல்துறைக்கிடையிலான அதிகார போட்டியே வல்லையில் இ;டம் பெற்ற வெடிப்பு மற்றும் வல்லிபுரம் பகுதியிலான வெடிப்பு  என அனைத்திலும் இக்குழறுபடிகளே பின்னிற்பது அம்பலமாகியுள்ளது.

கொழும்பில் இராணுவத்திற்கும் அதன் புலனாய்வு கட்டமைப்பிற்கும் முன்னுரிமை வழங்கி கோத்தா தரப்பு செயற்பட பதிலுக்கு காவல்துறை மற்றும் அதிரடிப்படை இத்தகைய வெடிப்புக்களை அரங்கேற்றுவது அம்பலமாகியுள்ளது.

No comments