இந்திய மீனவரை தேட இலங்கை கடற்படையிடம் உதவி?


தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718 இலக்கமுடைய றோளர் படகில் புறப்பட்ட நிலையில்  நான்கு மீனவர்களும் குறித்த படகில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு பயணித்த படகும் அதில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் எந்த தவலும் இல்லாத நிலையிலேயே மேற்படி படகு இலங்கை கரையை அடைந்ததா என இலங்கை கடற்படையினரிடம் கோரப்பட்டுள்ளது. இதேநேரம் இவ்வாறு காணமல்போன படகினைத் தேடி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உரங்குவானூர்தி ஒன்று கச்சதீவை அண்டிய பகுதிவரை தேடுதல் மேற்கொண்டு பறப்பில் ஈடுபட்டது.

No comments