காவல்நிலையத்தில் தற்கொலை!


யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


புத்தளம் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த் தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே மரணமானவராவார்.

இன்று அதிகாலை குறித்த பொலிஸ் நிலையத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.

No comments