வேலியை ஆடு மேயும் கதை?

குற்றவியல் புலனாய்வுத் துறையில் (சிஐடி) பணியிலிருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் நேற்றுமுன்தினம் (3) போதைப்பொருளுடன் புறக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேகநபரிடமிருந்து 1 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டது.

போதைப்பொருளை பிறிதொருவரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தபோது அவர் சிக்கினார். அவருடன் 30 வயதான மேலுமொருவரும் சிக்கினார்.
ஏற்கனவே போதைப்பொருளுடன் சில முறை அவர் சிக்கியபோது, தந்தையின் செல்வாக்கினால் விடுவிக்கப்பட்ட விடயமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரே இந்த வலையமைப்பை இயக்கியுள்ளார். கைதானவரும், ஆயுள்தண்டனை கைதியும் உறவினர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

No comments