அமெரிக்க தேர்தல் களத்தில் டிரம்ப்பை எதிர்த்து பைடன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து, திரு. பைடன் போட்டியிடுவார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தைப் பெற 7 மாநிலங்களிலும், கொலம்பியா வட்டாரத்திலும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முதற்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றதில் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் திரு. பைடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு முக்கியப் போட்டியாய் விளங்கிய திரு. பெர்னி செண்டர்ஸ் ஏப்ரல் மாதம் போட்டியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments