சுமந்திரன் பொருட்டேயில்லை! கருணா போட்டுப் பிடிப்பு

ஏம்.ஏ.சுமந்திரனின் பொய்கள் கிழக்கு மக்களிடம் எடுபடாது.அவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என ஒட்டுக்குழுத் தலைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும்  கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர்:-

எம்.ஏ.சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை அவருக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர் கொழும்பிலே பிறந்து வாழ்;ந்தவர். ஏம்.ஏ.சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது என தெரிவித்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்து கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுடன் ஒப்பிடும் போது எம்.ஏ.சுமந்திரன் அரசியல் கத்துக்குட்டி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு கருணா என்பவர் யார் என்று நன்றாக தெரியும். கண்ட கண்டவர்களின் கூற்றுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments