கூட்டணியும் பிரச்சார களத்தில் குதித்தது!


நாடாளுமன்ற தேர்தலிற்கு கட்சிகள் மும்முரமாக பிரச்சார களத்தில் குதித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ தேர்தல் பரப்புரை இன்று (27) யாழ் தொல்புரம் வழக்கம்பராயில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தொல்புரம் வழக்கம்பரையிலேயே இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களான க.வி.விக்னேஸ்வரன், சுரேஸ்பிரேமச்சந்திரன் ,சிறீகாந்தா உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டு பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.

No comments