தப்பியோர் கைது?

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயல்களுக்கு தயாரான நிலையில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 
நேற்று மாலை வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வன்செயலுக்காக சென்று கொண்டிருந்தபோது படையினர் அதிரடியாக சுற்றிவளைத்திருந்தனர். இதன்போது இரு ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 
ஏனைய ரவுடிகள் தப்பி ஓடியிருந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ரவுடிகளும், வாள்களும், மோட்டார் சைக்கிளும் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

No comments