புலியை கைது செய்யவில்லை:இலங்கை காவல்துறை!


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நோர்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த குறித்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர், கடந்த 22ம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக திரும்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச் செய்தியின் நம்பகரத்தன்மையை உறுதிப்படுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்னவை தொடர்பு கொண்டு கேட்டபோது, செய்தியில் குறிப்பிட்டுள்ளவாறு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அச்செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்தார்.

இதனிடையே நோர்வே வாழ் தமிழரான சேதுரூபன் என்பவரே கைதாகியிருப்பதாக கொழும்பு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments