சித்தார்த்தனுக்கு விளக்கம் குறைவு :அஸ்வின் அதிரடி!


தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்வீட்டு முரண்பாடு உச்சமடைந்துள்ள நிலையில் சுமந்திரன் சித்தார்த்தன் ஆதரவாளர்கள் முறுகல் மீண்டும் மூண்டுள்ளது.

ஏற்கனவே சரவணபவன்,மாவை சேனாதிராசா என ஒருபுறம் கச்சை கட்டிக்கொண்டிருக்கின்ற நிலையில் மறுபுறம் சுமந்திரன்,சிறீதரன் கூட்டு இன்னொரு புறம் நிற்கின்றது.

இந்நிலையில் இன்னொரு புறம் சித்தார்த்தனை சுமந்திரன் வம்பிக்கிழுத்துள்ளமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.

இம்முறை தேர்தலில் யாழ்;மாவட்டத்தில் கூட்டமைப்பு மூன்றிற்கு மேல் ஆசனங்களை பெறப்போவதில்லையென்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அதனை பெறுவது யாரென்பதில் மு;னனாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே முட்டல் மோதல் நாள் தோறும் உச்சமடைந்துள்ளது.

இந்த வரிசையில் இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் சுமந்திரன் ஆதரவு படையணியினை சேர்ந்தவரும் கனடாவில் அடைக்கலம் புகுந்துள்ளவருமான அஸ்வின் சித்தார்த்தனை வம்பிக்கிழுக்க சித்தார்த்தன் அணி போட்டிக்கு வம்பிக்கிழுக்க தொடங்கியுள்ளது. 

No comments