சித்தர் ஆதரவாளர்களை தேடும் காவல்துறை?


இரவிரவாக காப்பெட் வீதிகளை நாசமாக்கிய சித்தார்த்தன் ஆதரவாளர்களை தேடி காவல்துறை வலைவீசியுள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் சித்தார்த்தன் மற்றும் கஜதீபனின் ஆதவாளர்கள் மக்களது ஆதரவு கோரி பிரதான வீதிகளில் கைகளால் எழுதி வருகின்றனர்.

வீதி போக்குவரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய தரப்புக்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே காவல்துறை ஆதரவாளர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

தெருவோர சுவரொட்டிகளை கிழித்துவரும் காவல்துறையால் வீதியில் வீதியில் எழுதப்பட்டுள்ள பிரச்சாரங்களை அழிக்கமுடியாதுள்ளது.

இந்நிலையிலேயே வீதியை நாசமாக்கியவர்களை தேடிவரும் காவல்துறை சிலரை விசாரணைக்கு அழைத்துமுள்ளது.    

No comments