கூட்டமைப்பின் துரோகத்தை மறக்கமாட்டார்கள்?

கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட போகின்றது என வடக்கில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் விருந்தாளிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஐக்கிய தேசிய முன்னணி யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வடக்கு-கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கும் திட்டத்துக்கு   எவ்வித எதிர்ப்புமின்றி  ஆதரித்தனர்
அதன் விளைவாக அப்போதைய வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச  நாவற்குழி மற்றும் காங்கேசன்துறை பகுதியிலுள்ள பௌத்த விகாரைகள் புதுப்பொலிவு பெற முன் நின்று செயற்பட்டார் நல்லாட்சி அரசாங்க காலத்தில் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் ஒருவருக்கு சொந்தமாக உள்ள முருகன் ஆலய வளவில் இராணுவத்தினரின் மத வழிபாட்டுக்காக பௌத்த விகாரை கட்டப்பட்டது
எனினும்  குறித்த பகுதியை ராணுவம் விடுவித்த பின் நல்லாட்சி அரசின் பங்காளிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கம்பரலிய என்னும் மோசடி திட்டத்தை மக்கள் முன் அறிமுகப்படுத்தினார்கள் . அவ்வாறு அறிமுகப்படுத்தியவர்கள் தனியாருடைய வளவில் அமைக்கப்பட்ட பூர்வீகமாக இந்து ஆலயம் இருந்து வந்தததை அறிந்தும் கம்பொரலியத் திட்டத்தை செயற்படுத்த முன்குறித்த விகாரையை உரியவர்களிடம கலந்துரையாடி அகற்றுவதற்குஏன்  நடவடிக்கை எடுக்கவில்லை .    அப்போதைய  நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெற்றுக்கொண்ட சுகபோகங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவா  வாய் மூடி மொளனிகளாக இருந்தார்கள்.
ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல் விஞ்ஞாபனம் எனக் கூறி வந்தார்கள்  தற்போது கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படப் போகிறது எனப் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
வடக்காக இருந்தாலும்  கிழக்காக இருந்தாலும் தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் நல்லாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமிழர்களுக்கு செய்த துரோகத்தனத்தினை தமிழ் மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது. 

No comments