கொரோனா வைத்தியம் சம்பந்தர் மறுப்பு!தமிழ்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு, இலங்கையில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்குமாறு, இரா.சம்பந்தன் தெரிவித்தாக பரவும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

தமிழ்நாட்டில் வாழும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, இலங்கை அரசாங்கம் சிகிச்சையளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக  பல சமூகவலைத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.


இது தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், அவ்வாறானதொரு கருத்தை தான் தெரிவிக்கவில்லையெனவும் அந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானதெனவும் தெரிவித்தார்.

No comments