கொடூரக் கொலைக்கு நீதி வேண்டும், #JusticeForJayarajAndFenix சமூக ஊடகங்களில் வலுக்கும் கோரிக்கை!

காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் மற்றும் இதுபோன்ற அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கோரிக்கைகளுடன் #JusticeForJeyarajAndFenix என்ற ஹெஷ்டேக் மூலம் நாடு முழுவதிலிருந்தும் ஆதரவு எழுந்துள்ளது.

ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹெஷ்டேக் வைரலாகி வருகிறது. போலீஸ் கொடூரத்தை தமிழக மக்கள் கண்டித்து, கொடூரமாக கொல்லப்பட்ட இருவருக்கும் நீதி வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. 

அதாவது ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாதான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவத்தை மூடி மறைக்க நினைத்தனர், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். ஆனால் காவல் அதிகாரிகளின் செயலை கண்டித்து சாத்தான்குளம் மக்கள் போராட்டம் நடத்தியதால், இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதன்பிறகே இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மிருகத்தனமாக நடந்துக்கொண்ட துணை ஆய்வாளர்கள் இரண்டு பேரும், இதுபோன்ற பல சம்பவங்களை அரங்கேற்றி உள்ளதாக, ஆதரங்களுடன் பலர் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், அதைக்குறித்து தற்போது பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லும் நபர்களை, கொடூரமாக தாக்குவதும், உடைகளை கழற்றி, அந்தரங்க பகுதிகளில் கம்பை நுழைப்பதும், ஆண் உறுப்பின் மீது தாக்குவது மற்றும் ஆபாச வாரத்தைகளால் திட்டுவது என மனிதாபிமானம் அற்ற செயல்களில் ஈடுபடுவது தான் இவர்களின் கடமையாக இருந்துள்ளது.

இவர்களுக்கு தக்க தண்டனையை நீதிமன்றம் அளிக்கவேண்டும். இறந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என திரைத்துறையினர் , விளையாட்டுத் துறையினர், அரசியல் ஆய்வாளர்கள் , மனிதவுரிமையாளர்கள் , என இந்திய அளவில் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments