கூட்டமைப்பின் தேர்தலில் வட்டுக்கோட்டை?


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை இணைப்பதென்ற விடயத்தை முன்னிறுத்த தமிழ் அரசு கட்சி தலைமையிடமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும் தமிழ் அரசு கட்சியின் வாலிபர் அணி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணிக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களிற்குமிடையிலான சந்திப்பு இன்று (13) மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பில் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞஞாபனத்தில் இணைக்க வேண்டுமென்று வாலிபர் முன்னணியினர் கேட்டுக் கொண்டனர்.

அப்போது “வட்டுக்கோட்டை தீர்மானத்தை விஞ்ஞாபனத்தில் இணைக்க வேண்டுமென்றால், மீண்டும் ஆயுதப் போராட்டத்தை விரும்புகிறீர்களா?“ என எம்.ஏ.சுமந்திரன் இளைஞர்களிடம் பதில் கேள்வி கேட்டார்.

போராட்ட வழிமுறையை நாம் குறிப்பிடவில்லை, இலக்கையே குறிப்பிட்டோம் என வாலிபர் முன்னணியினர் குறிப்பிட்டனர். 

No comments