சமூக இடைவெளியில்லை:ஈபிடிபியினர் கைது!

ஈபிடிபியின் பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட 10 இளைஞர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இன்று மாலை பல இளைஞர்களை அழைத்து குறித்த வேட்பாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
சுகாதார முறைகளை பின்பற்றாதாதாலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்து உள்ளன.

No comments