வடக்கில் வெட்டுக்கிளி பயமில்லை:விவசாய பணிப்பளார்!


கிளிநொச்சி மாவட்டங்களில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக காணப்படவில்லையென பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் வெட்டுக்கிளியின் தாக்கம் கானப்படுவதோடு இந்தியாவிலும் தற்போது கானப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் உண்டா என விவசாயிகள் சந்தேகம்கொள்வது தொடர்பில் விவசாய திணைக்களமும் கவனம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா , கிளுநொச்சி , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம்வீதம் மூன்று இடங்களில் வெட்டுக்கிளிகள் இனம்காணப்பட்டதான தகவல்கள் எமக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் எமது நிலைய பூச்சியியல் ஆராச்சியாளர் நேரில் சென்று நிலமைகளை அவதானித்தார்.

இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஓர் சுண்டங்கத்தரி மரத்தில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் அனைத்தும் முற்கூட்டியே எரிக்கப்பட்டுவிட்டன. இதேநேரம் கிளிநொச்சியின் வட்டக்கச்சி பிரதேசத்திலும் வவுனியா மாவட்டத்தின் கோவில்புளியங்குளத்திலும் அடையாளம் கானப்பட்ட வெட்டுக்கிளிகள் மிகச் சொற்பமானவை.

அவ்வாறு இரு இடங்களிலும் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகளும் எந்தவொரு ஆபத்தும் அற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments