வெனிசுலா அதிபரைக் கடத்தும் அமொிக்காவின் திட்டம் தவிடுபொடியாகியது!

வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோவை அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லத் திட்டமிடப்பட்ட சதி முறியறிக்கப்பட்டுள்ளதாக வெனிசுலா அறிவித்துள்ளது.


நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமொிக்கர்களான லூக் டென்மன், ஐரான் பெர்ரி உட்பட மேலும் 11 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.

நேற்று செய்வாய்க்கிழமை வெனிசுலா அரச தொலைக்காட்சி லூக் டென்மனின் காணொளி பதிவை ஒளிபரப்பு செய்தது.

அதில் தலைநகர் கராகஸ் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோவை விமானத்தில் கொண்ட செல்ல அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.

இக்காணொளிப் பதிவின் பின் வெனிசுலா அதிபர் நிகோலா மதுரோ கருத்துத் தெரிவிக்கையில்:

இச்சதித்திட்டத்தை் தலைமை தாங்கியவர்  அமொிக்க அதிபர் டொனால் டிரம்ப் எனவும், வாசிங்டனில் உள்ள அதிகாரிகள் கரீபியன் கடல் வழியாக நுழைந்து இந்த சதித் திட்டத்தை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும் அது தோல்வியில் முடிந்துள்ளதாகவம் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேநேரம் புளோரிடாவைத் தளமாகக் கொண்டுள்ள பாதுகாப்பு நிறுவனமான சில்வர் கார்ப் யு.எஸ்.ஏ தலைவரும் இராணுவ வீரருமான ஜோர்டான் கவுட்ரூ, இந்த ஊடுருவலுக்கு பொறுப்பேற்றுள்ளார்.

வெனிசுலாவை மதுரோவிடம் இருந்து விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக தீட்டப்பட்ட நடவடிக்கை என்றும் மதுரோவை கொல்லாது வடிவமைக்கப்பட்ட நடவடிக்கையை இரு அமொிக்கர்ளுடன் இணைந்து செய்ததாக அவர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments