முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! முன்னணியினரை தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட 11 பேரை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளைத் தடுக்கும் ஒரு சதி நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்பட்டுள்ளது.

தமிழ் தமித் தேசிய முன்னணியினரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களாக நினைவுகூரப்பட்டு வந்தது.

செம்மணிப் படுகொலை, நவாலித் தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை படுகொலை, தமிழாராச்சி படுகொலை ஆகியவன தொடர்ச்சியா ஒவ்வொரு நாளாக நினைவுகூர்ந்தனர்.

நேற்றைய தினம் தமிழாராச்சி மாநாடு படுகொலை நினைவுகூரப்பட்டது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் 11 பேரையும் தனிமைப்படுத்த யாழ்மாவட்ட நீதிபதி பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

1. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2. பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்
3. தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்
4. சட்ட ஆலோசகர் சுகாஸ்
5. சட்ட ஆலோசகர் காண்டீபன்
6. யாழ் மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன்
7. யாழ் மாநகரசபை உறுப்பினர் தனுசன்
8. யாழ் மாநகர சபை உறுப்பினர் கிருபாகரன்
9. விஸ்ணுகாந்
10. சுதாகரன்
11. தமிழ்மதி

ஆகியோரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு யாழ் நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடா்பான கடிதம் சற்று முன்னர் காவல்துறையினரால் வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


No comments