கொரோனா இரண்டாவது அலையில் வைத்தியர்களே பலிக்கடா?

தேர்தல் ஜூன் 20 நடத்தப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என முன்னணி
வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான  நிலையிலும் நோய் பரவத் தொடங்கினால் கொரோனா பரவிய நாடுகளில் எல்லாம் நோயாளர்களுக்கு அடுத்த படியாக வைத்தியர்களே அதிகளவில் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற பெயரில் கொரோனா தொடர்பாக எந்த நிபுணத்துவமும் அற்ற போலி நிபுணர்கள் சுய விளம்பரத்துக்காகவும் அரசியல் இலாபத்துக்காவும் எவ்வாறு தொடர்ந்து பொறுப்பற்று செயல்ப்பட்டு கடந்த காலத்தில் மக்களையும் அரசாங்கத்தையும் தவறான வழியில் திருப்பி இலங்கையில் கொரோனா அதிகரிப்பதற்கு காரணமானர்கள் என்பதும் அடுத்த கட்டமாக வைத்தியர்களை பலி கொடுக்க தயாராகி வருகிறார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனவை தடுப்பதற்கு நேர்மையாக இணைந்துள்ள அனைவரும் பார்க்க வேண்டியது  என வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

No comments