இலங்கையில் மரணம் ஒன்பது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு 15 - முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் மரணமடைந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு சற்றுமுன் அறிவித்துள்ளது.

No comments