போக்குவரத்துகள் ஆரம்பம்!! முகக்கவசம் கட்டாயம்!

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்து  சேவைகள் இன்று வியாழக்கிழமை காலை முதல் சுகாதார
நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ்  உரிமையாளர் சங்கத் தலைவர் ரி. ரமேஸ் தெரிவித்தார்.

இதற்கமைய வடக்கு மாகாணத்திற்குற்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிற மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் மன்னாரிற்கு வருகை தர உள்ளது.

ஆனால் அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின் பற்றுவதுடன் பயணிகள் சுவாசக்கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

No comments