மழையால் பலநூறு பப்பாசி மரங்கள் நாசமாயின

கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

முழங்காவில் பகுதியில் நேற்று (6) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த 500 பப்பாசி மரங்கள் முறிந்து நாசமாகியுள்ளன.

No comments