உள்ளிருந்து போட்டுக்கொடுப்பா?


தனது மகனை வெளிநாட்டிலிருந்து தருவிக்க கோத்தாவிடம் அடைக்கலம் புகுந்த விவகாரத்தை உள் வீட்டு உறுப்பினர் ஒருவரே ஊடகங்களிடம் அம்பலப்படுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தென்னிலங்கையில் பாரதூரமான பேசு பொருளாகியுள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழுவின் நேர்மை கேள்விக்குள்ளாகியுமிருந்தது.

இந்நிலையிலேயே உள்ளிருந்து சிலரே இதனை போட்டுக்கொடுத்ததாக மகிந்த தேசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே குறித்த தரகு பணியில் ஜெனீவாவில் இலங்கையினை காப்பாற்றும் பணியிலுள்ள அவரது சகோதரர் சுனந்த தேசப்பிரிய மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

No comments