உலகத்தையே முடக்கிய வைரஸ்! மூன்று லட்சத்தை தாண்டிய உயிரிழப்புக்கள்!

கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 300,000ஐத் தாண்டியுள்ளது. அனால் அந்த எண்ணிக்கையை விட  அதிகமாகவே இருக்கக்கூடுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

உலக நாடுகள் ரீதியாக 4.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்குமுன், SARS நோய் பரவியபோது அது, 8,500 பேருக்குத் தொற்றி, 800-க்கும் அதிகமானவர்கள் பல்யாகியிருந்தமை குறிப்பிடத்தது.

10 ஆண்டுகளுக்குமுன், H1N1 கிருமி பரவியபோது அது, உலகெங்கும் 1.4 பில்லியன் பேருக்குத் தொற்றியது. அது, 151,000இல் இருந்து 575,000 பேர்வரை இறந்திருக்கலாம் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் வைரசுகள் ஆபத்தானவையாக இருந்தபோதும் ,அதன் தாக்கத்தால் உலகையே முடக்க்கும் நிலை ஏற்ப்படவில்லை என  நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments