அம்பாறையில் சட்டவிரோத தேக்க மரங்கள் மீட்பு!

வாழைச்சேனை கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில் ஊரடங்கு சட்டம் காலவேளையில் சட்டவிரோதமாக கொண்டு செல்வதற்கு தயாரான
நிலையில் இருந்த தேக்கு மரங்கள் மற்றும் வாகனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை கிரான் பிரதேசத்துக்குட்பட்ட புலிபாய்ந்தகல் கூழாவடி பகுதியூடாக கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்த பத்து அடி நீளமுடைய 23 தேக்கு மரங்களையும், கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த உழவு இயந்திரத்தின் பெட்டியையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மரங்களுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திர பெட்டியின் இலக்கத்தினை வைத்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கு வாழைச்சேனை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

No comments