தேர்தல் அல்ல:ஒன்றையுமே கிழிக்க முடியாது?


நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று என்னால் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தை வலுப்படுத்தாமலும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் தேர்தல் மாத்திரமல்ல வேறு எதனையும் முன்னெடுக்க முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரச தரப்பினர் மாத்திரமல்ல எதிர்தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்

தயவு செய்து எம்மை அரசியல்வாதிகளின் கூட்டுக்குள் திணிக்க வேண்டாம். காரணம் நாம் அரசியலில் ஈடுபடுவதில்லை. 30 வருடங்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அரச துறையில் செயற்பட்டுள்ளோம். இதன் போது பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்

No comments