கள்ள மண் விவகாரம்:காவல்துறை அடாவடி!


வடமராட்சி கிழக்கு குடத்தனை- மாளிகைத்திடல் அம்மன் கோவிலடிப் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸாா் – அதிரடிப்படையினர் வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 போ் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனா். 

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று நுழைந்த பொலிஸாா், கள்ள மண் ஏற்றினர் எனவும், கன்ரைனர் வாகனத்தை எடுத்து செல்லப்போகிறார்கள் எனவும் கூறியிருக்கின்றனா். இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கிறதா? எனப் பாா்க்குமாறும் வீட்டிலிருந்த இளைஞா்கள் கூறியனர்.

எனினும், விடாப்பிடியாக பொலிஸாா் வாகனங்களைத் தாம் எடுத்துச் செல்லபோகின்றனர் எனக் கூறினா்.

இதனையடுத்து பொலிஸாாின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனா். இதனையடுத்து தொலைபேசியை பறித்துவைத்த பொலிஸாா், கஞ்சாவை வைத்து வழக்குபோடுவோம் என அச்சுறுத்தினர். அத்துடன், வீடியோ வெளியே போகக்கூடாது எனவும் அச்சுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், இன்று காலை அதே வீட்டுக்குச் சென்ற பொலிஸாா் மற்றும் அதிரடிப்படையினா், பெண்கள், ஆண்கள், சிறுவா்கள், வயோதிபா்கள் என அனைவா் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனா். பெண் ஒருவரை காலால் மிதித்து அவா் மயங்கி விழும்வரை அடித்துள்ளனா். இந்நிலையில் 3 போ் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனா்.

மேலும் பலா் காயமடைந்துள்ளபோதும். அவா்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனா்.

No comments