"தமிழீழ இனப்படுகொலை" நினைவேந்தலும், இணையப் பரப்புரையிலும் இணைந்துகொள்ளுவோம்!

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தமிழர் கடலான- மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறமாகக் தமிழகத் தமிழர்களை ஒன்று திரட்டி தமிழீழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துவதனை தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வாக மாற்றும் வண்ணம் மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது

இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் அனைத்து மக்களையும் மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால், நினைவேந்தல் நிகழ்விற்கு மக்கள் நேரடியாக ஒன்று கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் , நீதிக்கான குரலையோ, நம் மக்களுக்கான அஞ்சலி செலுத்துதலையோ இந்த ஆண்டு நாம் கைவிடக் கூடாது என்று ஒவ்வொருவரும் அவரவரின் வீட்டின் முன்பிருந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ,மாலை 6 மணியளவில் இனப்படுகொலைக்கு நீதி கோரி சிறிய அளவிலான பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்புவோம்.அதை முகநூலில் பதிவு செய்யவும் மக்களுக்கு கோரிக்கையாக விடுத்துள்ளது மே பதினேழு இயக்கம்.

கீழ் கண்ட முழக்கத்தை மக்கள் எழுப்பிட ,குறிப்பாக பதாகையில் எழுதிப்பிடித்திட கோரிக்கை வைக்கிறது

*தமிழீழத்தில் ஐநா முன்னிலையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

*தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை அமைக்கப்பட வேண்டும்!

*தமிழர்களாய் ஒன்றிணைவோம்!
*தமிழீழ இனப்படுகொலையை நினைவேந்துவோம்!

மேலும், ட்விட்டர் இணையத்தளத்தில் மே 17 அன்று காலை 10 மணி முதல் #Justice4TamilGenocide மற்றும் #Referendum4TamilEelam எனும் Hashtag பரப்புரையினை நிகழ்த்தி, தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கேட்கும் பரப்புரையை இந்தியா முழுதும் கொண்டு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பரப்புரையிலும் உலகளாவிய தமிழ் மக்களை பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளது

No comments