ஊரடங்கில் பணி திரும்ப அழைப்புகொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன ஊழியர்களை நாளைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் இத்தகைய அவசர அறிவித்தலால்  பெரும் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பூராகவும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு சட்டம் அறிவித்திருக்கும் நிலையில் கண்ணிவெடி  அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஹலோ டிரஸ்ட் நிறுவனம் 8 நாளையதினம் அனைத்து ஊழியர்களையும் பணிக்கு சமூகம் தருமாறு அவசரமாக 7 இன்றையதினம் அழைப்பு விடுத்துள்ளதாக ஹலோ டிரஸ்ட் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.நாடு பூராகவும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமூலில் உள்ள நிலையில் 11ஆம் திகதி காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் அன்றிலிருந்து தனியார், அரச துறையினர் அணைவரும் பணிகளை ஆரம்பிக்கலாம் என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் அவசரமாக பணியாளர்களை 8 நாளையதினம் பணிக்கு திரும்புமாறு ஹலோ டிரஸ்ட் நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பு பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800-1000 ஊழியர்கள் குறித்த நிறுவனத்தில் பணி புரிகின்றார்கள் இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைதினம் 6 ஆம் திகதி பணிக்கு சென்ற ஊழியர்களுக்கு நிறுவனத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படாத நிலையில் திடீர் என இன்று காலை 7 ஆம் திகதி நாளை 8 ஆம் திகதி பணிக்குத் திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பு ஊழியர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். அதே போல அரச உயர் அதிகாரிகளும் இவ்விடயம் தொடர்பாக தகவல்கள் எதுவும் தெரியாது எனத் தெரிவிக்கின்றனர். இந் நிலையில் இவ் விடயம் தொடர்பில் ஹலோ டிரஸ்ட் முகாமைத்துவத்தினை தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments