இலங்கைக்கு வந்ததா வெட்டுக்கிளி?


இந்தியாவை உலுக்கி வரும் வெட்டுக்கிளி இலங்கைக்கும் வந்து சேர்ந்துள்ளது.


தென்னிலங்கையின் குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆராய்வதற்கு இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி று.ஆ.று. வீரகோன் குருநாகல்,மாவத்தகம பகுதிக்கு சென்றுள்ளார்.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments