ஈரான் கடலில் போர் ஒத்திகை! விபத்தில் 19 கடற்படையினர் பலி!

ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படையினர் நட்பு ரீதியான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு ஏவுகணை தாக்கியதில் 19 கடற்படையினர்
கொல்லப்பட்டதோடு மேலும் 15 கடற்படையினர் காயமடைந்துள்ளனர் என ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஓமான் வளைகுடாவில் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 1,270 கிலோமீட்டர் (790 மைல்) தொலைவில் உள்ள ஜாஸ்க் துறைமுகத்திற்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என ஈரான் இராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்க் மற்றும் சபாஹார் நீரில் கடற்படையின் பல கப்பல்கள் மேற்கொண்ட பயிற்சியின் போது, ​​கொனாரக் லைட் சப்போர்ட் கப்பல் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கப்பல் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை கோனாரக் என்ற ஹெண்டிஜன் வர்க்க ஆதரவுக் கப்பலைத் தாக்கியது எனக் குறிப்பிடத்தக்கது. டச்சு தயாரித்த இக்கப்பல் 47 மீட்டர் (155 அடி) நீளம் கொண்டது.1988 முதல் சேவையில் இருந்தது. 2018 ஆம் ஆண்டு குறித்த கப்பல் மாற்றி அமைக்கப்பட்டு ஏவுகணை பொருத்தப்பட்டது.

No comments