பாரிசில் நீர் விநியோகத்தில் கொரோனா வைரஸ்!!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் குடிநீர் இல்லாத விநியோகத்தில் கொரோன வைரஸ் தடையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஏ.எவ்.பி
செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம் குடிநீர் விநியோகம் மிகவும் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிசின் நீர் ஆணையகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 நீர் மாதிகளில் 4 மாதிரிகளில் சிறிதளவு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக இந்த நான்கு பகுதி நீர்விநியோகப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

குடிக்க முடியாத நீர் சீன் நதியிலிருந்து வீதிகளைச் சுத்தம் செய்தல், தோட்ட வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது.

குடிநீர் முற்றிலும் சுயாதீனமான வலையமைப்பிலிருந்து வழங்கப்படுகிறது. மேலும் எந்த ஆபத்தும் இல்லாமல் அதை குடிக்க முடியும் என்று நகரத்தின் உயர் சுற்றுச்சூழல் அதிகாரி பிளேவல் கூறினார்.

No comments