பெற்றோமாக்ஸ் வெளிச்சமே கமால் குணரத்தினவிற்கு தேவையாம்?


கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வடக்கிற்கு வருகை
தந்திருந்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்னவிற்கு இராணுவ மரியாதை மற்றும் செங்கள வரவேற்பு தேவையாகியுள்ளது.

வடக்கிலுள்ள அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு ஆகிய எங்களிடம் உள்ளது எனவே கொழும்பைப் போல தொற்று அதிகம் உள்ள இடமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது எனவே தற்போதைய நிலைமையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என அழைக்கப்பட்ட ஆதரவாளர்களிடையே அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஊரடங்கு வேளையில் வீடுகளில் தனிமையாக இருக்க ஆலோசனை தெரிவித்ததுடன் உண்மையை பேசுங்கள் ஏனெனில் நாங்கள் உங்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கின்றோம் எனினும் நீங்கள் உண்மையைக் கூறாது விட்டால் நாம் எந்த வித செயற்பாட்டையும் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பலாலியில் இராணுவ பாண்ட் அணிவகுப்பை பெற்றுக்கொண்ட அவர் முல்லைதீவிலும் அதே இராணுவ அணிவகுப்பை பெற்றிருந்தார்.

நெருக்கடியான இத்தகைய சூழலில் மக்கள் முடங்கியிருக்க படையினரை திரட்டி அணிவகுப்பு தேவையாவென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments