பெயருக்கு மட்டுமே கோத்தாவின் சலுகை

தமிழர்களின் இன்றைய ஆகக்குறைந்த வாழ்வாதாரமும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்த சலுகைகள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இதகுறித்து அவர் நேற்று (05 விடுத்துள்ள அறிக்கையில்,

'கொவிட்-19 என்னும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தில் உலகமெல்லாம் சிக்குண்டு கிடக்கிறது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கின்றி உள்ளது.

தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டு நோயின் தாக்கம் தொடர்பான அச்சமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் அன்றாடம் உழைத்து வாழ்ந்த மக்களும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உழைப்புமின்றி, பொருளாதார பலமுமின்றி, பாரிய பட்டினி நிலையையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, போரின் வடுக்களிலிருந்து மீளமுடியாத துன்பத்தில் வாழும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் பாரிய பட்டினிப் பிரச்சினையை இன்று எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம், சலுகைகள் என அறிவித்த விடயங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீன் ரின், பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் சகாய விலையில் கிடைக்கும் எனக்கூறியதும், வங்கிக் கடன்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட சலுகை விடயங்களும் ‘கோட்டாவின் அதிரடி சலுகைகள்’ என ஊடகங்களில் வெளிவந்த செய்தியாக மட்டுமே உள்ளன. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை - என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments