அரியாலை பிலதெல்பியா தேவாலயம் இடிக்கப்படும்: ஈழம் சிவசேனை?


வடக்கில் முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள பிலதெல்பியா மிசனறி தேவாலயத்தை இடித்தகற்ற ஈழம் சிவசேனை நடவடிக்கை எடுக்குமென அதன் தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சுவிஸ் மதபோதகரால் அமைக்கப்பட்ட அரியாலை தேவாலயம் முன்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று அவர் குதித்திருந்தார்.அதன் பின்னராக ஊடகங்களிடையே கருத்து தெரிவித்த அவர் மக்களது வயல்காணிகளை ஆக்கிரமித்து மக்களது எதிர்ப்பினையும் தாண்டி தேவாலயம் அமைக்கப்பட்டு;ளளது.

இதனை சட்டவிரோத கட்டடம் என தெரிவித்து தடை விதிக்க முற்பட்ட உள்ளுராட்சி அதிகாரிகள் தமிழரசு கட்சியின் முக்கிய புள்ளி ஒருவரது அரசியல்  அழுத்தத்தினால் பின்னர் பின்வாங்கியுள்ளனர்.இவை தொடர்பாக தகவல்களை திரட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு க.சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன .சுமார் 65 வரையிலான தேவாலயங்கள் இத்தகைய தரப்புக்களால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன.

அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அனுமதிக்கப்பட்ட மதங்கள் தவிர்ந்த புதிய மத அமைப்புக்கள் நிறுவப்பட பௌத்த கலாச்சார அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும்.

ஆனால் அவை எல்லாம் புறந்தள்ளப்பட்டே அரியாலை தேவாலயம் நிறுவப்பட்டுள்ளது.

இதனை இடித்தகற்ற விரைவில் நடவடிக்கையினை ஈழம் சிவசேனை அமைப்பு எடுக்குமெனவும் அவர் தெரிவித்தார். 

No comments