அரச அலுவலகங்களை திறக்க இலங்கை முயற்சி!


இலங்கையில் இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதென தனியார் துறையினர் ஆரோக்கியமான விதத்தில் நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாட்டின் தற்போதைய நிலைமையினை அவதானித்துப் பார்க்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைமையை விடவும் இப்போது ஆரோக்கியமான நிலைமையே உள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டின் தேசிய பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும். மக்களுக்கான உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். 

ஆகவே அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எனவே எதிர்வரும் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானவர்களை வேளைக்கு வரவழைத்து நிறுவனங்களை இயக்குவதெனவும் அதேபோல் கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் குறைந்த ஏனைய வெளி மாவட்டங்களில் தொழிற்ச்சாலைகள் , நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொழில்களுக்கு 50 வீதமானவர்களை தொழிலில் ஈடுபடுத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோல் தனியார் துறையினரும் இவ்வாறான அரச ஆலோசனைகளை பின்பற்றி தமது ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்க முடியும என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments