ரிஷாட்டை அழைத்தது சிஐடி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிஐடியினர் இன்று (15) அழைத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ரிஷாட்டின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னாரில் உள்ள காணி ஒன்று தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


No comments