அரிசி விற்பனை செய்வோரை தேடி சுற்றிவளைப்பு

அரசாங்கம் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவித்துள்ள நிலையில், அதனைவிட கூடுதல் விலையில் அரிசி விற்பனையில் செய்வோரை
தேடி, இன்று (11) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
எனவே, இன்று (11) நாடளாவிய ரீதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 
 அரிசிக்கான உச்சபட்ச சில்லரை விலையாக
1 கிலோ கிராம்  கீரி சம்பா ரூ.125, 1 கிலோ கிராம்  வெள்ளை மற்றும் சிவப்பு கெகுளு ரூ.85, 1 கிலோ கிராம்  சம்பா ரூ.90, நாட்டரிசி 1 கிலோ கிராம்   ரூ.90 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments