கஞ்சா ,அபின் ஓகே:அரசியல் கைதிகளிற்கு நோ?


யாழ். சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களை பிணையில் விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிமன்றங்கள் ஊடாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்றும் 44 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை ஊடாக 197 பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர். நேற்று விடுவிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தமாக 241 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்டவர்களுள் போதை பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கலாமென எதிர்பார்க்கப்படும் குற்றவாளிகளும் உள்ளனர்.

இதனிடையே தம்மை பிணையிலாவது செல்ல அனுமதிக்குமாறு கோரிய அரசியல்கைதிகளது கோரிக்கை கண்டுகொள்ளப்பட்டிருக்கவில்லை.

No comments