தகவல் கோருகின்றது கரவெட்டி பிரதேச செயலகம்!


ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று வியாழக்கிழமை யாழ்.திரும்பிய பொதுமகன் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530வி இனையும் முகவரியாக இல81,கரவெட்;டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கம் 0212263258 இற்கு தகவல் தர கோரப்பட்டுள்ளது.  


No comments