கர்ப்பிணி தாய்க்கு கொரோனா; சிசு பலி!

இலங்கையில் இன்று (24) மருதானையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர் கொழும்பு - டிசொய்ஷா ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை துரதிர்ஷ்டவசமாக இந்த பெண்ணின் சிசு உயிரிழந்துள்ளது என்று சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க  தெரிவித்தார்.

No comments