கணவாயால் பறிபோன சிறுவன் உயிர்!

கணவாய் சாப்பிட்டமையினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மட்டக்களப்பு - கல்லடியை சேர்ந்த அன்புதாஸ் கோகுல் (11-வயது) என்ற சிறுவன் இன்று (23) பலியாகியுள்ளான்.

சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 18ம் திகதி வீதியால் சென்ற மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாயை வாங்கி உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோரை தவிர ஏனைய 5 பேர் அன்று பகல் உணவாக சமைத்து சாப்பிட்டனர்.

இதனையடுத்து அடுத்த நாள் (19) கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்து எடுத்துள்ளனர்.

இந்நிலையில் நோய் குணமடையாததால் திங்கள் (20) குறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் அம்மம்மா, அம்மப்பா ஆகியோர் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்பின்னர் சிறுவனின் தந்தையார் மற்றும் மாமனர் ஆகியோரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று பலியாகியுள்ளான். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments