யாழுக்கு விடிவில்லை; ஆனால் ஓர்வழியுண்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை. ஆயினும் அபாயமற்ற பகுதிகளான தென்மராட்சி, தீவகம், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு சாத்தியம்.

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெிவித்தார். மேலும்,

அடுத்து வரும் வாரத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஆளுநர் மற்றும் பொலிஸருடன் ஆலோசித்த பின்னர் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பின் பின் இவ் ஆலோசனை ஆராயப்பட்டது. - என்றார்.

No comments