யாழில் தொடர்ந்தும் நல்ல சமிக்ஞை!


அடுத்து வரும் மூன்று மாதங்களிற்கு முற்றாக இலங்கையில் ஊரடங்கை தொடர ஆலோசகை வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டு தங்கி இருந்தவர்கள் மூவருக்கும் வைத்தியசாலைக்கு வெளியே தொற்றுக்கு உள்ளனவர்களுடன் தொடர்புடைய பதின்நான்கு பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.இப் பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு இலங்கையும் முடக்கப்படும் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகளை வெளியிடும், பகிரும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments