எல்லாமே அரசியலாகிவிட்டால் கொரோனா நிரந்தரவாசியாகலாம்! பனங்காட்டான்
நெருக்கடி வேளையிலும் அரசாங்கங்களின் பின்னால் மறைந்திருந்து அரசியல் வழிநடத்துவது தெரிகிறது. ஜனநாயகம் என்பது அவசர கால
வேளைகளில் சிறிதளவாவது ஒருநிலை முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். மக்கள் மரணித்து நாடு சுடுகாடான பின்னர் அரசியலைக் கையிலேந்துவதில் பயனில்லை. இப்போதைய காலம் போர்க்காலம் போன்றது. நடவடிக்கைகளும் அமுல்படுத்தல்களும் அவ்வாறே அமைய வேண்டும். இல்லையேல் கொரோனா நிரந்தரவாசியாகி அனைத்தையும் ஆட்சி புரியக்கூடும்.
கொரோனா என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பிரபலமான, மிக முக்கியமான பெயராக மட்டுமன்றி அதிமுக்கிய பயங்கரவாதியாகவும் இப்போது காணப்படுகிறது.
படித்தவர்கள் படிக்காதவர்கள், குழந்தை குஞ்சுகள், இளையோர் மூத்தோர்வரை அனைவருக்கும் சிம்மசொப்பனமாக இது மாறிவிட்டது.
எதற்கும் அஞ்சாதவர்கள்கூட கொரோனா என்ற பெயரைக் கேட்டவுடனேயே அச்சமடைகின்றனர். எந்தச் சத்தமுமின்றி கண்களுக்குப் புலப்படாது காற்றோடு காற்றாக வந்து மனிதக் கலங்களுக்குள் சென்று இது உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது.
சீனாவில் ஆரம்பமாகி மேற்கு நாடுகளில் பரவி இறுதியிலேயே வடஅமெரிக்காவை ஆக்கிரமித்து இன்று ஆட்சி புரிகிறது. வடஅமெரிக்கா என இங்கு குறிப்பிடப்படுவது டொனால்ட் ட்ரம்பை ஜனாதிபதியாகக் கொண்ட அமெரிக்காவையும், ஜஸ்ரின் ரூடோவைப் பிரதமராகக் கொண்ட கனடாவையும் உள்ளடக்கிய பரந்த பிரதேசம்.
இரண்டு நாடுகளினதும் சனத்தொகை சுமார் 368 மில்லியன். இவர்களுள் எத்தனைபேர் இன்னும் சில மாதங்களில் இருப்பார்களென்பதை நிச்சயமாகக் கூற முடியாதவாறு கொரோனா பரம்பல் வீச்சுக் கொண்டுள்ளது.
சிலவேளை இவ்வருட முடிவிலும் அடுத்தாண்டு ஆரம்பத்திலும் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகமாகலாமென்ற சிலரின் ஆருடம் சனத்தொகைச் சமப்படுத்தலை சிலவேளை ஏற்படுத்தலாம்.
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, பிரித்தானியா என்று மேற்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தவேளை கனடிய - அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்களும் அதன் தலைவர்களும் இதனை சீரியஸாகப் பார்க்கவில்லையென்று இப்போது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி கனடாவின் முதலாவது கொரோனா நோயாளி ஒன்ராறியோ மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டாரென இந்த மாதம்தான் தகவல் வெளிவந்துள்ளது. இங்கேயே தமிழர்கள் சுமார் இரண்டு லட்சம்பேர்வரை செறிந்து வாழும் ரொறன்ரோ பெருநகரம் உள்ளது.
பெப்ரவரி மாதம் நடுப்பகுதிவரை இங்கு எல்லாமே வழமைபோல் நடைபெற்றனவென்றால் கனடிய அரசும், சுகாதாரப் பகுதியினரும் ஏன் அசமந்தமாக இயங்கினர் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் காலத்தில்தான் கொரோனாவை ஓர் அரசியல் புரளியென்று ட்ரம்ப் நையாண்டி செய்தாரென்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கு நாடுகளில் இந்நோயின் தாக்கம் குறைவதாகவும், கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அமெரிக்காவிலும், கனடாவிலும் நோயாளர் தொகையும் மரணிப்போர் எண்ணிக்கையும் மேலோங்கி வருகிறது.
மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கைச் சுவாச கருவிகள் என்பவற்றுக்கு இங்கு தட்டுப்பாடு நிலவுவதாக வரும் தகவல்களை அரசமட்ட அறிவிப்புகள் வெளிவரும்போது யாரிடம் முறையிடுவது, யாரைக் குறை கூறுவது என்று தெரியவில்லை.
இதற்குள்ளும் ஒருவகை அரசியல் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. கனடாவுக்குத் தேவையான மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சைக்குரிய தரமான முகக்கவசங்களை அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் நிறுவனமே தயாரிக்கிறது. வழமைபோல அதனிடம் பல்லாயிரம் கவசங்களை கனடிய அரசு அண்மையில் கேட்டது.
அமெரிக்காவுக்குத் தேவையாக இருப்பதால் கனடாவுக்கு வழங்க வேண்டாமென அந்நிறுவனத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்த உத்தரவு கனடிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மலேரியா நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரோக்சிகுளோரைன் மருந்துக் குளிசைகளை இந்தியா பெருமளவில் தயாரிக்கிறது. அதனை அமெரிக்கா இந்தியாவிடம் கேட்டபோது தனது மக்களுக்கே அது தேவையெனக் கூறி இந்தியா மறுத்தது.
தமது கோரிக்கையை இந்தியா நிராகரித்தால் பாரிய பதிலடியைச் சந்திக்க நேருமென்ற ட்ரம்பின் மிரட்டலுக்குப் பயந்து 2.90 கோடி மாத்திரைகளை இந்தியா உடனடியாக அனுப்பியது. தாமதமின்றி பிரதமர் மோடியைப் பார்த்து உண்மையில் நீங்கள் பெரிய மனிதர்தான் என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார் என்றால் இதனை ஒருவகை அரசியல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?
இன்னொன்று - உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் சார்ந்து அதற்கு ஆதரவாக இயங்குவதாக ட்ரம்ப் ஒரு குண்டைத் திடீரெனத் தூக்கி வீசினார். அதுமட்டுமன்றி, இந்நிறுவனத்துக்கான நிதிப் பங்களிப்பை அமெரிக்கா நிறுத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
உலக சுகாதார நிறுவனம் மிக அமைதியாக நான்கு வார்த்தைகளில் இதற்குப் பதிலளித்தது. இன்றைய நெருக்கடியை அரசியலாக்க வேண்டாம்| என்பதே அந்தப் பதில்.
இன்னொரு நாள் ஏதாவது கனவு கண்டுவிட்டு எதையாவது ட்ரம்ப் உளறமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்விடத்தில் டேவிட் ஃப்ரம் என்ற ஆய்வாளர் இது ட்ரம்பின் தவறு (வுhளை ளை வுசரஅp'ள குயரடவ) என்ற தலைப்பில் ஓரிரு நாட்களுக்கு முன் எழுதிய கட்டுரையொன்றின் முக்கிய பகுதியை கீழே தருகின்றேன்:
'மார்ச் மாதம் 13ம் திகதி றோஸ் பூங்காவில் ட்ரம்ப் உரையாற்றுகையில் கொரோனா பற்றிக் குறிப்பிட்டு தாம் எந்தப் பொறுப்பையும் ஏற்கப்போவதில்லையென்றார். இந்த வார்த்தைகள் அவரது கல்லறை வாசகம் போன்று அமைந்தது. ஆனால் இப்போது தம்மைப் போர்க்கால ஜனாதிபதியென்று காட்ட முனைகிறார். இந்தப் போர் எவ்வாறானது? அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் இறந்தவர்களைவிட அதிகமானவர்கள் மார்ச் மாத இறுதியில் மரணித்துவிட்டனர். அமெரிக்கா எந்தவொரு சிவில் யுத்தத்திலும் இழந்தவர்களைவிட அதிகமானவர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் மரணித்துவிட்டனர். கொரிய யுத்தத்தில் இறந்தவர்களைவிட இந்த வார ஈஸ்ரர் காலத்தில் கூடுதலானவர்கள் மரணித்துவிடுவர். வியட்நாம் யுத்தத்தில் இறந்தவர்களைவிட ஏப்ரல் மாத இறுதியில் அதிகமானோர் மரணித்து விடுவர். தாம் நல்லவாறு பணிபுரிவதாக இப்போது கூறும் ட்ரம்ப், இரண்டு லட்சத்துக்கும் குறைவானவர்களே கொரோனாவால் மரணிப்பரென்று தெரிவித்துள்ளார்" என இக்கட்டுரை யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க அரசின் நடவடிக்கையே அங்கு அதிகமான மரணங்களை ஏற்படுத்துவதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது. ஏறத்தாள இதேவாறான ஒரு போக்கில்தான் கனடாவும் சென்று கொண்டிருக்கிறது.
தினமும் காலையிலிருந்து மாலைவரை பிரதமரும், மாகாண முதலமைச்சர்களும், நகர முதல்வர்களும், மருத்துவ முதன்மையாளர்களும் தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக நேரலை உரையாற்றுகின்றனர். நிவாரணமும் சலுகைகளும்தான் இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றன.
கனடாவில் இதுவரை ஒரு மில்லியன் மக்கள் நேரடியாக வேலை இழந்துள்ளனர். சுமார் மூன்று மில்லியன் வரையானோர் வருமானம் இழந்துள்ளனர். இன்னொரு தொகையினர் நோயாளிகளாகி அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
தினமும் ரொக்கட் வேகத்தில் நோய் பரவலும், அதற்கு நிகராக மரணங்களும் நிகழ்கின்றன. மருந்து எதுவும் இதுவரை கண்டறியப்படாததால் மரணங்களை அரசியல்வாதிகள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை தொடருமானால் கனடிய சனத்தொகையான முப்பத்தேழு மில்லியனின் 2.5 சதவீதத்தினர் கொரோனாவால் பீடிக்கப்படுவர். குறைந்தது 22,000 பேர் மரணிக்க வாய்ப்புண்டு என்று கனடிய பிரதம மருத்துவ அதிகாரி திரேசா ராம் அறிவித்துள்ளார்.
நிலைமை கட்டுப்பாட்டை மீறுமானால் அனைத்து எண்ணிக்கையும் இரண்டு மடங்காகும். மரணிப்போர் தொகை நாற்பதாயிரத்தைத் தாண்டலாமெனவும் இவர் எச்சரித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்து நிலைவரம் வேறு விதமானது.
ஒரு நாளில் 480க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இப்போது தினமும் நோய்வாய்ப்படுவோர் தொகை இரட்டிப்பாகி வருகிறது. இதுவரை மரணித்தோர் தொகை 220க்கும் அதிகம். ஒன்ராறியோவின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் டொனாலி திடீரென பதவி துறந்துள்ளார். காரணம் கூறப்படவில்லையாயினும் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதே காரணமாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
இங்குள்ள மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்த 88 பேர் ஒரு வாரத்துக்குள் மரணமானது அதிர்ச்சியளித்துள்ளது. மருத்துவ நிலைய குறைபாடுகளே இதற்குக் காரணமென கண்டறியப்பட்டுள்ளதால் பலர் தமது உறவினர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
அவசர அவசிய தேவைகளுக்கு உதவ ராணுவம் தயார் என்று பிரதமர் அறிவித்து ஒரு வாரமாகியும், கியுபெக் மாகாணம் தவிர மற்றைய மாகாணங்களில் அவர்கள் களமிறக்கப்படவில்லை. கனடிய மனித உரிமைச் சாசனமே இதற்குத் தடையாகவுள்ளதாம்.
இந்தச் சாசனத்தின்படி மாகாண அரசாங்கங்கள் கேட்காதவிடத்து ராணுவத்தைக் களமிறக்க மத்திய அரசுக்கு அனுமதியில்லை. ராணுவத்தைக் கேட்டுவிட்டால் அடுத்த தேர்தலில் தங்களைப் பாதிக்கலாமென மாகாண அரசுகள் எண்ணுகின்றன. மாகாண அரசுகள் கேட்காதவிடத்து ராணுவத்தை அனுப்பினால் எதிர்க்கட்சிகள் தங்களைப் பதம் பார்த்துவிடுமென ரூடோ அரசு கருதுகிறது.
இதுவும்கூட இன்னொரு வகை அரசியல். ஆடு - புலி விளையாட்டுப் போன்ற இந்த அரசியலில் சிக்கித் தவிப்பது அப்பாவி மக்களே.
மறுதரப்பில், காலம் கடந்த நிலையிலும், அவசர கால விதிகளை அமுல் செய்ய ரூடோ அரசு கருதுவதை அவர்களின் உள்ளக ஆவணமொன்று வெளிப்படுத்தியுள்ளது. இதனை மாகாண அரசுகளுக்கு அனுப்பி அவர்களின் கருத்தைப் பெற ரூடோ அரசு விரும்புகிறது.
1988ல் உருவாக்கப்பட்ட அவசர கால விதிகள் அமுலுக்கு வருமானால் போக்குவரத்துத் தடை, பொதுச் சொத்துகளை பயன்படுத்துவது, அத்தியாவசிய சேவைகளை நேர்ப்படுத்துவது, பொதுச் சேவைகளை சீராக்குவது, அத்தியாவசிய தங்கிடங்களையும் வைத்தியசாலைகளையும் அமைப்பது, சகல மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்துவது என்பவை மத்திய அரசின் கைகளுக்குச் செல்லும்.
தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்குமென்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாத பிரதமர், கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்கும்வரை தற்போதைய நிலை தொடருமென எச்சரித்துள்ளார்.
இவ்வாறான கட்டத்தில் அவசரகால விதிகளை அமுல்படுத்த மாகாண அரசுகள் சம்மதமளிப்பது உகந்ததாக அமையலாம்.
ஆனால், அவர்களின் பின்னால் மறைந்திருந்து வழிநடத்தும் அரசியல் இதற்கு இடங்கொடுக்குமா என்பது கேள்விக்குறி.
ஜனநாயகமென்பது அவசர கால வேளைகளில் சிறிதளவாவது ஒருநிலை முடிவெடுப்பதாக இருக்க வேண்டும். மக்கள் மரணித்து நாடு சுடுகாடான பின்னர் அரசியலைக் கையிலேந்துவதில் பயனில்லை. இப்போதைய காலம் போர்க்காலம் போன்றது. நடவடிக்கைகளும் அமுல்படுத்தல்களும் அவ்வாறே அமைய வேண்டும். இல்லையேல் கொரோனாவே நிரந்தரவாசியாகி அனைத்தையும் ஆட்சி புரியக்கூடும்.

Post a Comment