புதிய எபோலோ!

50 நாள்களுக்கு பின்னர் கொங்கோ நாட்டில் ஒருவருக்கு எபோலோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.
கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி புதிய எபோலோ வைரஸ் தொற்று கிழக்கு கொங்கோவின் பெனி நகரில் 26 வயதான இளைஞருக்கு உறுதியானது. 
அதன் பின்னர் 50 நாள்களுக்கு பின்னர் மீண்டும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் எபோலா வைரஸால் கொங்கோவில் 2,200 பேர் பலியானார்கள். 
வரலாற்றின் 2ஆவது மிக மோசமான எபோலா தொற்றின் மய்யமாக இருந்த பெனிநகரில் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கொங்கோவை உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது

No comments