யாழிற்கு விலக்கில்லை?


கொரோனா வைரஸ் தொடர்பில் அவதான மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதோடு, மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த 19 மாவட்டங்களுக்கும் மீண்டும் ஏப்ரல் 6ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டு, அதே தினத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments