இலங்கையிலும் தர்ம அடி: சடலங்கள் தீக்கிரை!


இலங்கையில் ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில்
வீதிகளில் அநாவசியமாக நடமாடுவோர் தர்ம பிரம்படிக்கு உள்ளாகியுள்ளனர்.தென்னிலங்கையில் அவ்வாறு தர்ம அடி வாங்குபவர்களை சிங்கள புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனிடையே கொரோன தோற்று காரணமாகவோ, கொரோனா சந்தேகத்திலோ மரணிக்கும் அனைவரினதும் சடலங்கள் அனைத்தும் போலீசாரின் கண்காணிப்பின் கீழ் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்களின் மேற்பார்வையில் தகனம் செய்யப்படுமென சுகாதார அமைச்சு அறிவிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது அத்துடன் சடலங்களை குளிப்பாட்டுவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாhக இலங்கையில் மரணித்த இரண்டாவது கொரோனா நோயாளியான முஸ்லீம் நபரது சடலத்தை எரியூட்ட முஸ்லீம் அரசியல் தரப்புக்கள் முற்பட்ட போதும் இதனை அரசு ஏற்றுக்கொண்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments