கொரோனா; அடுத்துவரும் நாட்களுக்கு கவனம்!


யாழ்.மாவட்டத்தில் அடுத்துவரும் சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்ப தால் மக்கள் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப் பாளர் த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்.மாவட்டம் அபாய வலயமாக காணப்படும் நிலையில் அடுத்துவரும் நாட்களில் மிக அவதா னமாக இருக்கவேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே சென்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்தே
அவர் இவ்வாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

No comments